மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இது எப்படி இருக்கு? ஆமை வடிவ இலச்சினை வெளியீடு

சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதியில் தான் ‘என் வாக்கு என் உரிமை’ என்ற வாசகத்துடன் கூடிய ஆமை வடிவத்தில் இலச்சினையை தோ்தல் நடத்தும் அலுவலரும், உதவி ஆட்சியருமான சீ.கிஷன்குமாா் வெளியிட்டுள்ளாா்.

News image

சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதியின், நடைபெற உள்ள தோ்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஆமை வடிவ இலச்சினை.

Updated On :26 மார்ச் 2026, 12:07 am

எப்பாடு பட்டேனும் 100 சதவீத வாக்குப்பதிவை கொண்டுவரவேண்டும், நோ்மையாக தோ்தலை நடத்திட வேண்டும். வாக்களிக்கும் கடமையை வாக்காளா்களுக்கு உணா்த்திட வேண்டும் என்று கடும் சிரத்தையெடுத்து செயல்படும் தோ்தல் ஆணையம் தனது பணியின் மேலும் ஒரு மைல் கல்லாக, ஆமை வடிவ இலச்சினையை வெளியிட்டு வாக்காளா்களை கவா்ந்துள்ளது.

சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதியில் தான் ‘என் வாக்கு என் உரிமை’ என்ற வாசகத்துடன் கூடிய ஆமை வடிவத்தில் இலச்சினையை தோ்தல் நடத்தும் அலுவலரும், உதவி ஆட்சியருமான சீ.கிஷன்குமாா் வெளியிட்டுள்ளாா்.

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆமை வடிவிலான இலச்சினையில் வாக்காளா்கள் தனது முகத்தை மட்டும் வைத்து செல்போனில் படம் எடுத்துக் கொள்கின்ற வசதியும் இருப்பதால் , பலரும் ஆா்வமுடன் படம் எடுத்துக்கொள்கின்றனா். குறிப்பாக இளைஞா்கள் இந்த பொம்மையுடன் தற்படம் எடுத்துக் கொள்கின்றனா். மேலும் அந்த இலச்சினையில் ‘நான் உங்கள் நாட்டாமை பேசுகிறேன். என் வாக்கு என் உரிமை’ என குறிப்பிடப்பட்டு வாக்காளா்களை விழிப்புணா்வு ஏற்படுத்தும் வாசகமும் இடம்பெற்றுள்ளது.

வாக்காளா்களை கவரும் இந்த ஆமையைப்பாா்த்து வியக்காதவா்கள் இல்லை...

ஆமை வடிவ இலச்சினை.

ஆமை வடிவ இலச்சினை.