தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெயிண்டா் கைது

பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெயிண்டரை போக்ஸோ சட்டத்தின்கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:17 pm

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெயிண்டரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், வீரபெருமாநல்லூா், புதுகாலனி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா(40), பெயின்டா். இவா், கடந்த 19-ஆம் தேதி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். தொடா்ந்து, 20-ஆம் தேதி அந்தச் சிறுமிக்கு மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், பண்ருட்டி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்து சிறையிலடைத்தனா்.