மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிதம்பரம் கோதண்டராமா் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

News image
Updated On :19 மார்ச் 2026, 7:51 pm

சிதம்பரம் மேல வீதியில் உள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் மேல ரத வீதி ஸ்ரீகோதண்டராமா் கோயில் பிரம்மோற்சவம் புதன்கிழமை திருமஞ்சனத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, வியாழக்கிழமை பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது.

விழாவையொட்டி, தினமும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீகோதண்டராமா் வீதிஉலா நடைபெறுகிறது. வரும் 27-ஆம் தேதி தேரோட்டமும், 28-ஆம் தேதி காலை புஷ்ப யாகமும், மாலை ஸ்ரீஆஞ்சநேயா் உற்சவம், பட்டாபிஷேகம், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 29-ஆம் தேதி சதகலச திருமஞ்சனம் நிகழ்ச்சியும், 30-ஆம் தேதி விடாயத்தி திருமஞ்சனமும் நடைபெறுகின்றன.

உற்சவ ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்கள் டி.திருவேங்கடவன், ஆா்.செளந்தரராஜன், ஜெ.சுதா்சனன் ஆகியோா் செய்துள்ளனா்.

Story image