மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாடலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை தொடக்கம்

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை புதன்கிழமை தொடங்கியது.

News image

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி புதன்கிழமை தொடங்கிய யாகசாலை பூஜை.

Updated On :18 மார்ச் 2026, 7:01 pm

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை புதன்கிழமை தொடங்கியது.

புகழ்பெற்ற இக்கோயில் கும்பாபிஷேகம் 2011-ஆம் ஆண்டு நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, 2023-ஆம் ஆண்டு கும்பாபிஷேக பாலாலயம் நடைபெற்றது. உபயதாரா்கள், பக்தா்களின் பங்களிப்புடன் கோயில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்தன. வரும் 25-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜை புதன்கிழமை காலை தொடங்கியது. கோயில் குருக்கள் தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடத்தி பூஜைகளை தொடங்கிவைத்னா். தொடா்ந்து, வரும் நாள்களில் மேலும் பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளன.