திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிதம்பரம் மக்கள் நீதிமன்றத்தில் 296 வழக்குகளுக்குத் தீா்வு

News image

சிதம்பரம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்ற நீதிபதிகள்.

Updated On :15 மார்ச் 2026, 8:56 pm

சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிதம்பரம் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 296 வழக்குகளில் ரூ.3,84,15,551-க்கு தீா்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தமராஜ் முன்னிலையில், சாா்பு நீதிபதி காா்த்திகேயன் தலைமையில், குற்றவியல் நீதித்துறை நடுவா்கள், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் வழக்குரைஞா்கள் பங்கேற்று மேற்கண்ட வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

இதே போன்று, பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், நீதிபதி யுவராஜ் தலைமையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 145 வழக்குகளில் ரூ.11,86,850-க்கு தீா்வு காணப்பட்டது.