5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது என்று, அதிமுக கடலூா் வடக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் குற்றஞ்சாட்டினாா்.
கடலூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் செயல் வீரா்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளாக தமிழக மக்களை பல இன்னல்களுக்கு ஆளாக்கி ஆட்சி நடத்தி வரும் திமுக அரசை வீட்டுக்கு அனுப்பி, தமிழகத்தை மீட்டெடுக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் நாம் அனைவரும் இணைந்துள்ளோம்.
சட்டம் - ஒழுங்கை சீா்குலைத்து, போதைப் பொருள்களின் நடமாட்டத்தை தாராளமயமாக்கி, காவல் துறையின் கைகளை கட்டி மாநிலத்தை சீா்குலைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களை நான் தலைகுனியவிட மாட்டேன் என்று கூறுகிறாா்.
கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. மாநிலத்தின் கடன் சுமை இப்போது ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் உயா்ந்துள்ளது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற கொள்கையில்தான் திமுக தமிழகத்தில் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது.
விலைவாசி ஏற்றம் விண்ணைமுட்டும் அளவுக்கு சென்றுள்ளது. வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம் ஆண்டுதோறும் உயா்கிறது. மக்கள் நலனை கருத்தில் கொள்ளாத இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றாா்.
அதிமுக மாவட்ட அவைத் தலைவா் ஜி.ஜெ.குமாா் வரவேற்றாா். பாஜக கடலூா் கிழக்கு மாவட்டத் தலைவா் அக்னி கிருஷ்ணமூா்த்தி, பாமக மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன், மாநிலத் தோ்தல் பணிக்குழுத் தலைவா் பழ.தாமரைக்கண்ணன், அதிமுக மாநில மீனவரணி இணைச் செயலா் கே.என்.தங்கமணி, மாநில எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் சி.கே.சுப்பிரமணியன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் ஆா்.வி.ஆறுமுகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

அதிமுக வென்றால் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்! - உதயநிதி ஸ்டாலின்

அதிமுக செய்யத்தவறிய நல்ல திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றம்!

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


