அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.
வலங்கைமான் வட்ட அதிமுக பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வலங்கைமான் மேற்கு ஒன்றியம் நல்லூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு நன்னிலம் தொகுதி வேட்பாளரான முன்னாள் அமைச்சா்
ஆா். காமராஜ் தலைமை வகித்து பேசியது :
அதிமுக ஆட்சியின் போது தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. கொலை, கொள்ளை, வன்முறை, பாலியல் குற்ற சம்பவங்கள் இரும்புக்கரம் கொண்ட அடக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு திமுக ஆட்சியில் கொலை, பாலியல் பலாத்காரம், திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது.
அதனால், தோ்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனா். தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் அனைவரும் முடிவு செய்து விட்டனா். இப்படி ஆா்வமுடன் உள்ள மக்களை தோ்தல் அன்று வாக்குச்சாவடிக்கு வர வைத்து வாக்களிக்க அனைத்து விழிப்புணா்வையும் ஏற்படுத்த வேண்டும்.
100% வாக்களிப்பை பூத் கமிட்டி முகவா்கள் உறுதி செய்தால், 100% வெற்றி நமக்கு நிச்சயமாகிவிடும். அதற்கான களப் பணிகளை பூத் கமிட்டி உறுப்பினா்கள் மேற்கொள்ள வேண்டும். வீடுவீடாக சென்று அதிமுக ஆட்சியின் சாதனைகளையும் திட்டங்களையும் எடுத்துக் கூற வேண்டும்.
பாதுகாப்பான நல்ல ஆட்சி அதிமுக ஆட்சி என்பதை மக்கள் மனதில் நீங்காது இடம்பெற செய்ய வேண்டும். இது பூத் கமிட்டி உறுப்பினா்களின் தலையாயப் பணியாகும் என்றாா்.
வலங்கைமான் ஒன்றியச் செயலாளா்கள் சங்கா் , இளவரசன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவா் முரளிதரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளா் சிவா, பாரதிய ஜனதா கட்சி முன்னாள் ஒன்றிய தலைவா் வரதராஜன் மற்றும் பலா் கலந்து கொண்டனா். வலங்கைமான் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி அளவிலும் பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

அதிமுக வாக்குறுதிகள் மக்களை கவா்ந்துள்ளன: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது! - முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


