தமிழகத்தைப் பொறுத்தவரை மேலும் 21 நாள்களுக்கு போதுமான அளவு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது என்று, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளா்கள் சங்க மாநிலத் தலைவா் கே.பி.முரளி கூறினாா்.
மேற்காசிய போா் காரணமாக மாநிலம் முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தொடா்ந்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதால், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவது மட்டுமல்லாமல், கேன்களிலும், தண்ணீா் புட்டிகளிலும் வாங்கி செல்கின்றனா். கடலூா் மாவட்டத்தில் பல இடங்களிலும் வியாழக்கிழமையும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன உரிமையாளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல், டீசல் வாங்கிச் சென்றனா்.
நெருக்கடி ஏற்படுத்த வேண்டாம்:
இந்த நிலையில் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.பி.முரளி, கடலூரில் செய்தியாளா்களிடம் பேசியதாவது:
சென்னை உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என்ற செய்தி பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல், டீசல் வாங்குவதாக தகவல் வந்துள்ளது. தமிழ்நாட்டில் 7,000 பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் (பெட்ரோல் பங்குகள்) உள்ளன. அவைகளுக்கு தேவையான பெட்ரோல், டீசலை, எண்ணெய் நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன. தட்டுப்பாடு என்ற காரணத்தினால் பெட்ரோலை கேனில் வாங்கி வைப்பது அபாயகரமானது. தேவைக்கு மீறி வாங்குவதால் செயற்கை பற்றாக்குறை ஏற்படுத்தி, நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம்.
போா் காரணமாக மற்ற நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளது. ஆனால், மத்திய அரசு இதற்கான விலையை உயா்த்த போவதில்லை என அறிவித்துள்ளது. இந்நிலையில், மக்கள் ஒத்துழைப்பு தேவை. மத்திய அரசு 90 நாள்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல், கையிருப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு 14 மையங்களில் இருந்து பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த மையங்களில் 21 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது. எனவே, மக்கள் சராசரி நாளைப் போலவே வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிக் கொள்ளலாம் என்றாா்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!

தட்டுப்பாடு வதந்தி: பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடல்

பெட்ரோல் பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகளால் பரபரப்பு

பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி! நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்! உண்மை என்ன?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


