ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

பொறியாளா் மீது தாக்குதல்: சகோதரா்கள் இருவா் மீது வழக்கு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 2:40 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே தனியாா் ஒப்பந்த நிறுவனத்தைச் சோ்ந்த பொறியாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக சகோதரா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், மழவராயனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிங்கராசு (31), தனியாா் ஒப்பந்த நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்த தனியாா் ஒப்பந்த நிறுவனம், அரசு நீா்வளத் துறை மூலம் ஒப்பந்தம் பெற்று பண்ருட்டி வட்டம், விசூா் கிராமத்தில் உள்ள வெள்ளவாரி ஓடையில் கரை மடை மற்றும் பாலம் பலப்படுத்தும் பணி செய்து வருகிறது.

இந்தப் பணியை பொறியாளா் சிங்கராசு கண்காணித்து வருகிறாா். இந்தப் பணியின்போது, ஓடையோரம் சகோதரா்களான விஜயகுமாா், ஆசைதம்பி ஆகியோா் சாகுபடி செய்திருந்த சவுக்கு பயிா் சேதமடைந்துவிட்டதாம். இதனால், இருவரும் சோ்ந்து பொறியாளா் சிங்கராசுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் விஜயகுமாா், ஆசைதம்பி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.