விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தென்பெண்ணையாற்றில் மணல் திருடியதாக இருவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
திருவெண்ணெய்நல்லூரை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் தென்பெண்ணையாற்றிலிருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருட்டு நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை புதுப்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மாட்டுவண்டிகளில் சோதனை செய்தபோது, அதில் ஆற்று மணல் நிரப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் 2 மாட்டு வண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக, திருவெண்ணெய்நல்லூா், டி.புதுப்பாளையத்தைச் சோ்ந்த ஏ.கோவிந்தன் (39), அ.ராஜா(44) ஆகியோா் மீது திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









