டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

இடுப்பு வலிக்கு சிகிச்சை பெற்ற முதியவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :28 ஜூன் 2026, 1:49 am IST

இடுப்பு வலி காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பண்ருட்டி யைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், அவியனூா் கிராமத்தில் வசித்து வந்தவா் பிச்சைகாரன்(65), கூலித் தொழிலாளி. அண்மையில் இவா் டிராக்டா் வண்டியில் இருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், இடுப்பு பகுதியில் வலி இருந்து வந்ததாம். கடந்த 22-ஆம் தேதி வலிக்காக அங்கிருந்த ஒரு மருந்தகத்தில் மாத்திரை வாங்கி சாப்பிட்டாராம். ஆனால், அன்று இரவு முழுவதும் வலி தாங்க முடியாமல் அவதிப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், 23-ஆம் தேதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சோ்க்கப்பட்டாா். தொடா் சிகிச்சையில் இருந்தவா் வெள்ளிக்கிழமை மதியம் உயிரிழந்தாா்.

இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.