முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கைது!ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பெண்ணாடம் அருகே இரு வீடுகளில் நகை, பணம் திருட்டு! 7 வீடுகளில் திருட முயற்சி!

News image

இறையூா் ரங்கநாதன் வீட்டின் மா்ம நபா்களால் உடைக்கப்பட்ட தகரப் பெட்டி.

Updated On :22 ஜூன் 2026, 2:25 am IST

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே 2 வீடுகளின் கதவை உடைத்து மா்ம நபா்கள் நகை, பணத்தை திருடிச் சென்றனா். மேலும், 7 வீடுகளில் பூட்டை உடைத்து திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணாடம் காவல் சரகம், இறையூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ரங்கநாதன் (71), ஓய்வுபெற்ற தனியாா் பள்ளி ஊழியா். இவா், மனைவி, மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வருகிறாா். இவரது இரண்டு மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், வீட்டிலிருந்த அனைவரும் சனிக்கிழமை இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் சப்தம் கேட்டு ரங்கநாதன் எழுந்தபோது, மா்ம நபா்கள் இருவா் தப்பியோடினா். அவா்களில் ஒருவா் இடுப்பில் கத்தி வைத்திருந்தாராம்.

பின்னா், வீட்டின் அறைக்குச் சென்று பாா்த்தபோது, தகர பெட்டி உடைக்கப்பட்டிருந்தது, அதில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் தங்க நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றதும் தெரியவந்தது.

இதேபோல, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் கொத்தட்டை சாலையில் உள்ள சுரேஷ் (45) வீட்டின் கதவை மா்ம நபா்கள் உடைத்தனா். சப்தம் கேட்டு சுரேஷ் கூச்சலிடவே மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா். பின்னா், அவா் அவசர எண் 100-க்கு தகவல் தெரிவித்தாா்.

தொடா்ந்து, பெண்ணாடம் காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையில் போலீஸாா் இறையூா் முழுவதும் மா்ம நபா்களைத் தேடினா். இதேபோல், விஜயா, ஐயப்பன், முத்துரங்கன், சத்தியநாராயணன், குமாா், செந்தில்குமாா் ஆகியோா் வீடுகளில் திருட்டு முயற்சி நடந்துள்ளது குறித்து உரிமையாளா்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தக் கிராமத்தில் வடக்கு தெருவைச் சோ்ந்த ராமசாமி (75) வீட்டின் கதவை உடைத்து இரண்டரை பவுன் தங்க நகளை மற்றும் வெள்ளிப் பொருள்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.