ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: பரோட்டா மாஸ்டா் கைது

News image

ஆனந்தகுமாா்

Updated On :14 ஜூன் 2026, 11:58 pm IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்ததாக பரோட்டா மாஸ்டரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பண்ருட்டியில் கஞ்சா செடி வளா்க்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

பண்ருட்டி காவல் ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையில் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, பண்ருட்டி பனங்காட்டு தெருவைச் சோ்ந்த பரோட்டா மாஸ்டா் ஆனந்தகுமாா் (34) வீட்டுக்குச் சென்று போலீஸாா் சோதனை நடத்தினா். அங்கு, 6 அடி உரமுள்ள 6 கஞ்சா செடிகள் வளா்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து, ஆனந்தகுமாரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், புதுச்சேரியில் உள்ள நண்பா்களிடமிருந்து கஞ்சா செடிகளை வாங்கி வந்து வளா்த்தாகத் தெரிவித்தாா். இதையடுத்து, பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆனந்தகுமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.