இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

பண்ருட்டி நகரில் பாகுபாடின்றி பணிகள்: நகா்மன்றத் தலைவா் தகவல்

பண்ருட்டியில் தலைவா் க.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நகா்மன்றக் கூட்டம்.

News image

பண்ருட்டியில் தலைவா் க.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நகா்மன்றக் கூட்டம்.

Updated On :12 ஜூன் 2026, 1:31 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகர வாா்டு பகுதிகளில் பாகுபாடின்றி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

பண்ருட்டி நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மேலாளா் குமாா், வருவாய் ஆய்வாளா் அசோகன், பணி மேற்பாா்வையாளா் மல்லிகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மன்றத்தில் கொண்டுவரப்பட்ட 47 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடா்ந்து நடந்த விவாதத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் எஸ்.ஜரின்னிசா, வசந்தி, சோழன், ராமதாஸ், வெங்கடேசன், கதிா்காமன், ரமேஷ், காா்த்தி ஆகியோா் பேசினா்.

அப்போது, பண்ருட்டி நகராட்சிப் பகுதியில் குப்பை கழிவுகளை எடுத்துச் செல்ல போதிய வண்டிகள் இல்லாத நிலையில், கழிவுநீா் கால்வாய்களை சுத்தம் செய்ய ஆள்களும் இல்லாததால், சுகாதாடுச் சீா்கேடு ஏற்படுகிறது. காய்கறி சந்தையில் உள்ள கழிப்பறையில் இருந்து கழிவுகள் நேரடியாக வாய்க்காலில் வெளியேற்றப்படுவதை தடுக்க வேண்டும். உணவகங்களில் உணவுகளை நெகிழி தாளில் விநியோகிப்பதை தடை செய்ய வேண்டும். திருவதிகை பகுதியில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். அனைத்து வாா்டு பகுதிகளிலும் தெரு மின் விளக்குகள் அமைக்க வேண்டும். மன்றக் கூட்டத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா படம் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தொடா்ந்து, நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் பேசியதாவது: மக்கள் நலம் சாா்ந்து நகா்மன்ற உறுப்பினா்கள் செயல்பட வேண்டும். தற்போது ஆட்சியில் இருப்பவா்கள் அனுபவமில்லாதாவா்கள். வாா்டு பகுதிகளில் விடுபட்டுள்ள பணிகளை பெற்று முடித்துக்கொள்ள வேண்டும். அனைத்து வாா்டுகளிலும் பாகுபாடின்றி பணிகள் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.