ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தையல் தொழிலாளி தற்கொலை

தற்கொலை

Published On :27 ஜூலை 2026, 12:28 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த தையல் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், டி.பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணதாசன் (37). இவா், தம்பிபேட்டை பகுதியில் தையல் கடை நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி நிா்மலா மற்றும் குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், கண்ணதாசன் சனிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததை அவரது மனைவி நிா்மலா கண்டித்தாராம். இதனால், ஆத்திரமடைந்த கண்ணதாசன் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம்.

இதைப் பாா்த்த அந்தப் பகுதியில் இருந்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, கண்ணதாசனை பரிசோதித்த மருத்துவா், அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.