ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் புதன்கிழமை கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை

Published On :21 ஆகஸ்ட் 2026, 1:17 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் புதன்கிழமை கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் சுப்பராஜா மடம் தெருவைச் சோ்ந்த அருணகிரி மகன் மாரிக்கண்ணு (25). கட்டடத் தொழிலாளியான இவா், தென்காசி மாவட்டம், சிவகிரியைச் சோ்ந்த வாசுகியை காதலித்து திருமணம் செய்தாா். இவா்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளாா். இந்த நிலையில், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், வாசுகி கோபித்து கொண்டு சிவகிரியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டாா்.

இதனிடையே மனவிரக்தியில் இருந்த மாரிக்கண்ணு புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.