ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சாலையில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

நெய்வேலி அருகே சாலையில் நடந்து சென்றபோது தவறி விழுந்து காயமடைந்தவா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பலி சடலம் மீட்பு  உயிரிழப்பு

சடலம்... - கோப்புப் படம்

Published On :26 ஜூலை 2026, 2:06 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே சாலையில் நடந்து சென்றபோது தவறி விழுந்து காயமடைந்தவா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், மேல்வடக்குத்து பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (47). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாம். சண்முகம் கடந்த 18-ஆம் தேதி வடக்குத்து பிரதான சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றாா். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உறவினா்கள் அவரை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்ந்தனா். இருப்பினும், அங்கு சண்முகம் சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.