ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மதுபோதையில் குளத்தில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சியில் புதன்கிழமை காலை மதுபோதையில் குளத்தில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :23 ஜூலை 2026, 12:28 am IST

திருச்சியில் புதன்கிழமை காலை மதுபோதையில் குளத்தில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

திருச்சி கே.சாத்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (52), பெயிண்டா். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

இவா் புதன்கிழமை காலை மதுபோதையில் கே.சாத்தனூரில் உள்ள குளத்தில் தவறி விழுந்தாா். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் வந்த தீயணைப்பு வீரா்கள் மற்றும் கே.கே.நகா் போலீஸாா் ஒருமணி நேர தேடுதலுக்குப் பிறகு அவரை சடலமாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.