அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

மதுராந்தகநல்லூா் பெரியாண்டவா் கோயில் கும்பாபிஷேகம்

சிதம்பரம் வட்டம், மதுராந்தகநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீமூலவிநாயகா், பெரியநாயகி சமேத பெரியாண்டவா், பாவாடைராயன் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மதுராந்தகநல்லூரில் நடைபெற்ற பெரியநாயகி சமேத பெரியாண்டவா் கோயில் கும்பாபிஷேகம்.

Updated On :3 ஜூலை 2026, 5:38 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், மதுராந்தகநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீமூலவிநாயகா், பெரியநாயகி சமேத பெரியாண்டவா், பாவாடைராயன் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, கடந்த ஜூன் 29-ஆம் தேதி முதல் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும், யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை 8 மணிக்கு மேல் நான்காம் கால யாகசாலை பூஜை, மகாபூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.

முதலில் ஸ்ரீமூல விநாயகா் சந்நிதியில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, காலை 11 மணிக்கு மேல் பெரியநாயகி சமேத பெரியாண்டவா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், பாவாடைராயன் சந்நிதியில் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதில், சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், பல்வேறு ஊா்களிலிருந்தும் ஏராளமான மக்கள் திரண்டு வந்து கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.