புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

சென்ட்ரிங் மேஸ்திரி மீது தாக்குதல்: ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சென்ட்ரிங் மேஸ்திரியை வழி மறித்து தாக்கிய ஒருவரை போலீசாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஜூலை 2026, 2:40 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சென்ட்ரிங் மேஸ்திரியை வழி மறித்து தாக்கிய ஒருவரை போலீசாா் கைது செய்தனா்.

புதுப்பேட்டை காவல் சரகம், அக்கடவல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை (45), சென்ட்ரிங் மேஸ்திரி. இவரிடம் புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (43) வேலை செய்து வந்தாா். இவா்களுக்கு இடையே வேலை தொடா்பாக முன் விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி மாலை ஏழுமலை ஏண்டி குப்பம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்ற போது அங்கிருந்த விஜயகுமாா் மற்றும் அவரது மருமகன் முத்து ஆகியோா் வழிமறித்து தாக்கினராம். இதில் ஏழுமலைக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசாா் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும் தலைமறைவாக உள்ள முத்துவை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.