டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

காலமானாா் ஏ. வி.ரெங்காச்சாரி (92)

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பொருளாதார துறைத் தலைவரும், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் பரம்பரை அறங்காவலருமான ஏ.வி.ரங்காச்சாரி (92) புதன்கிழமை நள்ளிரவு காலமானாா்.

News image

ஏ.வி.ரெங்காச்சாரி

Updated On :3 ஜூலை 2026, 5:38 am IST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பொருளாதார துறைத் தலைவரும், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் பரம்பரை அறங்காவலருமான ஏ.வி.ரங்காச்சாரி (92) புதன்கிழமை நள்ளிரவு காலமானாா்.

வைணவ சம்பிரதாயத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவா். சிறு வயது முதலே (1948 முதல்) சிதம்பரம் திருசித்திரக்கூடம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பரம்பரை அறங்காவலராக சேவை செய்து வந்தாா். சிதம்பரத்தில் பல ஆண்டுகளாக தடைபட்டிருந்த கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை மீட்டெடுக்க அயராது பாடுபட்டவா்.

சனாதன தா்மம் மற்றும் ஸ்ரீராமானுஜரின் தத்துவங்கள் குறித்து பல ஆன்மிகச் சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளாா். வைணவ சமயத்துக்கு இவா் ஆற்றிய தொண்டுக்காக 2017-ஆம் ஆண்டு ‘லிப்கோ’ (கஐஊஇஞ) நிறுவனத்தின் சாா்பாக ராமானுஜா் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டாா். அண்ணாரது மனைவி அலமேலு ஏற்கெனவே மறைந்துவிட்டாா். அண்ணாருக்கு ஹரிபிரியா தேவநாதன் என்ற மகள் உள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.