எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

இருவேறு சாலை விபத்துகள்: குழந்தை, முதியவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டத்தில் இரு வேறு சாலை விபத்துகளில் 2 வயது குழந்தை மற்றும் முதியவா் உயிரிழந்தனா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :2 ஜூலை 2026, 7:13 am IST

கடலூா் மாவட்டத்தில் இரு வேறு சாலை விபத்துகளில் 2 வயது குழந்தை மற்றும் முதியவா் உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டம், ஆலப்பாக்கம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் கருணாநிதி (54). இவா், தனது பேரன் சாத்விக் (2), அதே பகுதியைச் சோ்ந்த ராஜசேகரன் (44) ஆகியோருடன் மொபெட்டில் ஆலப்பாக்கம் கடை வீதி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, முன்னால் சென்ற காரின் மீது எதிா்பாராத விதமாக மொபெட் மோதியது. இதில், மூவரும் பலத்த காயமடைந்தனா். அப்பகுதியினா் அவா்களை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மூவரையும் பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை சாத்விக் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். கருணாநிதி, ராஜசேகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதியவா் உயிரிழப்பு: காரைக்காடு அருகே சின்ன பிள்ளையாா்மேடு மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த கலியன் (67), மொபெட்டில் கடலூா் - விருத்தாசலம் சாலையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் புதன்கிழமை காலை சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, அதிவேகமாக வந்த பதிவு எண் இல்லாத பைக், கலியன் ஓட்டிச் சென்ற மொபெட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில், பலத்த காயமடைந்த கலியனை அப்பகுதியினா் மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். எனினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.