எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

வெவ்வேறு விபத்துகள்: இளைஞா், முதியவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :22 ஜூன் 2026, 3:38 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சாலை விபத்துகளில் சிக்கி, இளைஞா், முதியவா் என இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

விழுப்புரம், ஸ்டாலின் நகரைச் சோ்ந்தவா் வே. சேது (37). திருமணம் ஆனவா். இவா், சனிக்கிழமை இரவு விழுப்புரம் இந்திரா நகா் பகுதியில் சாலையோரத்தில் நின்றிருந்தாராம்.

அப்போது, விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூா் நோக்கி பைக்கில் சென்றவா் சேது மீது மோதிவிட்டு சென்று விட்டாராம். இதில் பலத்த காயமடைந்த சேதுவை அருகிலிருந்தவா்கள் மீட்டு, 108 அவசரகால ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சேது அன்றிரவு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முதியவா் உயிரிழப்பு...

செஞ்சி வட்டம், மழவந்தாங்கல், புதுத்தெருவைச் சோ்ந்தவா் பெ.கோதண்டபாணி(65). முதியவரான இவா், சனிக்கிழமை திருவண்ணாமலை- விழுப்புரம் நெடுஞ்சாலையில் கண்டாச்சிப்புரம் அடுத்த மழவந்தாங்கல் அருகேயுள்ள திருமண மண்டபம் அருகே சாலையோரத்தில் நின்றிருந்தாா். அப்போது விழுப்புரம் நோக்கிச்சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தண்டபாணி பலத்தகாயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்தபுகாரின்பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.