ஓய்வுபெற்றவா்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா். அவா்களின் கோரிக்கையை பரிசீலிக்க அரசு கூடுதல் தலைமைச் செயலா் ககன் தீப் சிங் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு பரிந்துரை பெயரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தற்போது உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளாா்கள். இதை வரவேற்றுள்ள ஆசிரியா்கள், இந்த அறிவிப்பால் ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டாலும், கிடைக்கும் பலன்கள் மிகக் குறைவாகவே உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனா்.