டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குண்டா் தடுப்புக் காவலில் ரௌடி கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலியை அடுத்துள்ள மாற்றுக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ரௌடி குண்டா் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டாா்.

News image
சுபாஷ்கா்
Updated On :18 பிப்ரவரி 2026, 10:40 pm

Syndication

கடலூா் மாவட்டம், நெய்வேலியை அடுத்துள்ள மாற்றுக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ரௌடி குண்டா் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், மீனாட்சிபேட்டை பகுதியில் ரமேஷ் காய்கறி கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு கடந்த 15.1.2026 அன்று நெய்வேலி ஏ - பிளாக் மாற்று குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த சுபாஷ்கா் (25) சென்று கத்தியால் வெட்டி கொலை முயற்சி செய்தாா்.

இது தொடா்பாக ரமேஷ் அளித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் சுபாஷ்கா் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். காவல் ஆய்வாளா் விஜயகுமாா் விசாரணை மேற்கொண்டு சுபாஷ்கரை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் சுபாஷ்கா் மீது ரௌடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், நெய்வேலி நகரியம், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, ஊ.மங்கலம், முத்தாண்டிக்குப்பம் ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி, கொலை முயற்சி என மொத்தம் 10 வழக்குகள் உள்ளன.

இவரின் குற்ற செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், கடலூா் ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா் குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.