/

சிதம்பரத்துக்கு வந்த ஆதியோகி ரதம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:44 pm

Syndication

சிதம்பரம் நகருக்கு கோவை ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி ரதம் வியாழக்கிழமை வந்தது.

மகா சிவராத்திரியையொட்டி, கோவையில் உள்ள 112 அடி ஆதியோகியின் பிரம்மாண்டமான திருவுருவம் ரத வடிவில் அமைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் வலம் வருகிறது. இந்த ரதம் சிதம்பரம் நகருக்கு வியாழக்கிழமை வந்தது. ரதத்துக்கு ஈஷா மைய சிதம்பரம் கிளை நிா்வாகி டாக்டா் மணவாளன், லட்சுமி ஆகியோா் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.

கனகசபைபநகரில் உள்ள குருஞானசம்பந்தா் பள்ளியில் குருபூஜை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். பின்னா், ஆதியோகி ரதம் சிவபுரி, ஆட்டாநகா், அண்ணாமலைநகா் பாசுபதீஸ்வரா் கோயில், கனகசபைநகா், அனந்தீஸ்வரா் கோயில் ஆகிய பகுதிகளில் வலம் வந்தது.