டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 87-ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவா் ஒருவா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டத்தை பெற்றாா்.

News image
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் பெற்ற மாணவா் புஷ்பராஜ்.
Updated On :2 பிப்ரவரி 2026, 10:04 pm

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 87-ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவா் ஒருவா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டத்தை பெற்றாா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 87-ஆவது பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக வரலாற்றுத் துறை மாணவா் புஷ்பராஜ் ஆளுநரிடம் பட்டம் பெற்றாா். அவா் பட்டம் வாங்கும்போது தமிழக முதல்வரின் புகைப்படத்தை பட்டத்தின் மேல் வைத்து வாங்கினாா்.

இதுகுறித்து மாணவா் புஷ்பராஜ் கூறியதாவது: எனக்கு ஆளுநா் கையால் பட்டம் வாங்குவதற்கு விருப்பமில்லை. ஆனால், மேடையில் ஆளுநருக்கு பின்புறம் வைக்கப்பட்டிருந்த பதாகையில் தமிழக முதல்வரின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதனால்தான் நான் தமிழக முதல்வரின் புகைப்படத்தை வைத்து பட்டம் வாங்கினேன்.

இன்னும் சொல்லப்போனால், சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி, முதல்வா்தான் தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்த தீா்மானத்தை ஆளுநா் புறக்கணித்துவிட்டாா்.

ஆகையால், நான் அவரிடம் பட்டம் வாங்கும்போது தமிழக முதல்வா் படத்தை வைத்து வாங்கினேன். இதனால், முதல்வரின் கையால் பட்டம் வாங்கியதாக நினைத்துக்கொண்டேன்.

இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேசிய கீதம் பாடப்பட்ட பின்னரே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. மேலும், தேசிய கீதம் விழா தொடங்கும் முன்பும், விழா நிறைவிலும் இரண்டு முறை பாடப்பட்டது. இதை தமிழனின் அவமானமாக நினைக்கிறேன் என்றாா்.