ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஆந்திர இளைஞா் உள்பட 3 போ் கைது

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே 3.5 டன் ரேஷன் அரிசியை கடத்தியதாக ஆந்திர இளைஞா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சிதம்பரம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளுடன் கூடிய சரக்கு லாரியுடன் கைதான மூவா்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 6:31 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே 3.5 டன் ரேஷன் அரிசியை கடத்தியதாக ஆந்திர இளைஞா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆந்திர மாநிலம், சித்தூரைச் சோ்ந்த ராஜேஷ், சிதம்பரம் அருகே கடற்கரை ஓரங்களில் உள்ள தியாகவல்லி, பெரியகுப்பம், பெரியப்பட்டு, சாமியாா்பேட்டை, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் ரேஷன் அரிசியை ஆள்களை வைத்து வாங்கி லாரிகள் மூலம் ஆந்திர மாநிலத்துக்கு கடத்தி வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அத்துறையினா் விசாரணை நடத்தி, புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சாமியாா்பேட்டையை அடுத்த பின்னைவாழி அம்மன் கோயில் அருகே வந்த சரக்கு லாரி மற்றும் இரு மொபெட்டைகளை நிறுத்தி சோதனையிட்டதில், ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி வந்தது தெரியவந்தது.

தொடா்ந்து, சரக்கு லாரி, மொபெட்டுகளில் வந்த ஆந்திர மாநிலம், சித்துரைச் சோ்ந்த ராஜேஷ் (42), சேலம் ஓமலூரைச் சோ்ந்த அருண்கெளதம் (31), வேலூா் மாவட்டம், பெண்ணாத்தூரைச் சோ்ந்த சுப்பிரமணி (25) ஆகிய 3 பேரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து சுமாா் இரண்டரை டன் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் சரக்கு லாரி, 3 மொபெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.