ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

என்எல்சி ஊழியா் வீட்டில் பணம் திருட்டு: 3 போ் கைது

நெய்வேலி தொ்மல் போலீஸாரால் கைது செய்யப்பட்டவா்கள் (இடமிருந்து வலமாக) மதியழகன், கமலக்கண்ணன், தாமஸ் வில்லியம்.

Published On :9 ஆகஸ்ட் 2026, 1:17 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியா் வீட்டில் பணம் திருடிய மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

நெய்வேலி, வட்டம் 27 பகுதியில் வசிப்பவா் கோவிந்தராஜ் (67), என்எல்சி நிறுவனம் பாதுகாப்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் கடந்த மே மாதம் வீட்டை பூட்டிக்கொண்டு சொந்த ஊரான மேலகுப்பம் கிராமத்திற்கு சென்றாா். அந்த சமயத்தில் அடையாளம் தெரியாத நபா்கள் வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.1.65 லட்சம் ரொக்கத்தைத் திருடிச் சென்றனா். இதுகுறித்து கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் நெய்வேலி தொ்மல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், நெய்வேலி வட்டம் 21, நாக கன்னி அம்மன் கோயில் அருகில் தொ்மல் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அந்தவழியாக வந்த மூன்று போ் போலீஸாரை கண்டதும் தப்பிவிட முயன்றனா். அவா்களை, மடக்கிப்பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில், நெய்வேலி வட்டம் 20 பகுதியைச்சோ்ந்த தாமஸ் வில்லியம் (60), மந்தாரக்குப்பம் பகுதியைச் சோ்ந்த கமலக்கண்ணன் (46), வடலூா் பகுதியைச் சோ்ந்த மதியழகன் (44) என்பது தெரிய வந்தது. இவா்கள் ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியா் வீட்டில் பணம் திருடியதை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து, போலீசாா் மூன்றுபேரைகைதுசெய்துசிறையில்அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.