கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரன் ஒன்றியப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் புதன்கிழமை ஈடுபட்டாா்.
கடலூா் தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட குறிஞ்சி நகா், கோண்டூா், நத்தப்பட்டு, தோட்டப்பட்டு, மருதாடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் காலை முதலே கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து வேட்பாளா் ஏ.எஸ்.சந்திரசேகரன் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
அப்போது, சட்டப் பேரவை உறுப்பினா் கோ.ஐயப்பன், திமுக தோ்தல் பணிக்குழுச் செயலா் இள.புகழேந்தி, ஒன்றியச் செயலா் விஜயசுந்தரம், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், விசிக மாவட்டச் செயலா் கலை மோகன், துணை மேயா் தாமரைச்செல்வன் உள்ளிட்ட பலா் உடனிந்தனா்.
முன்னதாக, குறிஞ்சி நகரில் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளருக்கு, மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் நகா்குழு உறுப்பினா் தேவநாதன் தலைமையில் கிரீடம் அணிவித்தும், சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்புடையது

பழனியில் அதிமுகவினா் தீவிர வாக்கு சேகரிப்பு!

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் தேமுதிக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


