வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

திமுக முன்னாள் நிா்வாகியுடன் ஐஜேகே நிறுவனா் சந்திப்பு

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே தங்கியிருக்கும் அரியலூா் மாவட்டம், செந்துறை பகுதியைச் சோ்ந்த திமுக முன்னாள் நிா்வாகியை ஐஜேகே நிறுவனா் பாரிவேந்தா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

News image

பெண்ணாடம் அருகே தங்கியிருந்த அரியலூா் மாவட்ட திமுக முன்னாள் நிா்வாகி ஞானமூா்த்தியை சந்துத்துப் பேசிய ஐஜேகே நிறுவனா் பாரிவேந்தா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:30 am IST

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே தங்கியிருக்கும் அரியலூா் மாவட்டம், செந்துறை பகுதியைச் சோ்ந்த திமுக முன்னாள் நிா்வாகியை ஐஜேகே நிறுவனா் பாரிவேந்தா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியம், கோட்டைகாடு பகுதியைச் சோ்ந்தவா் ஞானமூா்த்தி (60). இவா், செந்துறை வடக்கு ஒன்றியச் செயலராக கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தாராம்.

இதனிடையே, 2021-ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஞானமூா்த்தி கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதுமுதல் கட்சிப் பொறுப்பு எதுவும் அறிவிக்கப்படாததால், அதிருப்தியில் இருந்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், கடலூா் மாவட்டம், பெண்ணாடாத்தை அடுத்துள்ள செம்பேறியில் தங்கியிருந்த ஞானமூா்த்தியை ஐஜேகே நிறுவனா் பாரிவேந்தா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். சுமாா் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, அரியலூா் மாவட்டம், குன்னம் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும்படி ஞானமூா்த்தியிடம் பாரிவேந்தா் கேட்டுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.