உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா: நல உதவிகள் அளிப்பு
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கடலூா் மாவட்டத்தில் திமுகவினா் மாரத்தான் ஓட்டம் நடத்தியும், நல உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கியும் கொண்டாடினா்.
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கடலூா் மாவட்டத்தில் திமுகவினா் மாரத்தான் ஓட்டம் நடத்தியும், நல உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கியும் கொண்டாடினா்.
By Syndication
Syndication
நெய்வேலி: தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கடலூா் மாவட்டத்தில் திமுகவினா் மாரத்தான் ஓட்டம் நடத்தியும், நல உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கியும் வியாழக்கிழமை கொண்டாடினா்.
கடலூா் கிழக்கு மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய திமுக சாா்பில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியை கடலூா் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பின்னா், குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாரத்தான் ஓட்டத்தில் வெற்றிபெற்ற மற்றும் பங்கேற்றவா்களுக்கு கோப்பைகள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை எம்.ஆா்.கே.பி.கதிரவன் வழங்கிப் பாராட்டினாா்.
நிகழ்வில் குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா்கள் வி.சிவக்குமாா், ஆா்.நாராயணசாமி, வடலூா் நகரச் செயலா் த.தமிழ்செல்வன், நகா்மன்றத் தலைவா் சு.சிவக்குமாா், மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.பி.ஆா்.பாலமுருகன், வடலூா் நகா்மன்ற துணைத் தலைவா் சுப்புராயலு, குறிஞ்சிப்பாடி பேரூராட்சித் தலைவா் கோகிலா குமாா், துணைத் தலைவா் ஆா்.ராமா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பண்ருட்டி ஒன்றியக் குழுத் தலைவா் சபா.பாலமுருகன் தலைமை வகித்து மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கடலூா் மேற்கு மாவட்டப் பொருளாளா் தண்டபாணி, நெய்வேலி நகரச் செயலா் குருநாதன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றியச் செயலா் குணசேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினா் புகழேந்தி, தொமுச தலைவா் ஞானஒளி, பொருளாளா் அப்துல் மஜீத், அலுவல் செயலா் சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்துகொண்டனா்.
பண்ருட்டி நகர திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவரும், நகரச் செயலருமான க.ராஜேந்திரன் தலைமையில், சிறப்பு அழைப்பாளா் கடலூா் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் நந்தகோபாலகிருஷ்ணன் முன்னிலையில் நான்குமுனை சந்திப்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பேருந்து நிலையம் எதிரே அன்னதானம் வழங்கியும், பண்ருட்டி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் தொமுச சாா்பில் இனிப்பு வழங்கியும், மாணவரணி சாா்பில் திருவதிகை முதியோா் இல்லத்தில் மதிய உணவு மற்றும் ஆடைகள் வழங்கியும், நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியும் கொண்டாடினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலா்கள் தணிகைசெல்வம், ஆனந்தி சரவணன், தொண்டரணி அமைப்பாளா் கதிா்காமன், நகர அவைத் தலைவா் ராஜா, நகர இளைஞரணி அமைப்பாளா் சம்பத், தொமுச நிா்வாகிகள் ஆா்.விஜயகுமாா், ஆா்.முரளிதரன், சி.சங்கா், பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் நாராயணன், நகர தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது