சேலம் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா
சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
By Syndication
Syndication
தம்மம்பட்டி/ஆத்தூா், நவ. 27: சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லியில் நடைபெற்ற விழாவுக்கு நகர திமுக செயலாளா் சு.பாலமுருகன் தலைமை வகித்தாா். கெங்கவல்லி பேரூராட்சித் தலைவா் சு.லோகாம்பாள், துணைத் தலைவா் மருதாம்பாள் நாகராஜ் மற்றும் கவுன்சிலா்கள் முன்னிலை வகித்தனா்.
திமுக கொடி ஏற்றப்பட்டு, அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்த திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
தொடா்ந்து கெங்கவல்லி ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் கெங்கவல்லி மஞ்சினி முதியோா் இல்லத்தில் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் ஜெகதீஷ்பாபு தலைமையில் முதியோா்களுக்கு உணவு அளிக்கப்பட்டன. ஒன்றிய திமுக இளைஞரணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
கடம்பூரில்... கடம்பூரில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவிற்கு கெங்கவல்லி ஒன்றிய திமுக செயலாளா் கடம்பூா் ஆா்.சித்தாா்த்தன் தலைமை வகித்தாா். கடம்பூா் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் மணிகண்டன், பிடிஏ தலைவா் ராஜசேகரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். திமுக கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் கடம்பூா் திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
கெங்கவல்லி அருகே கூடமலை, தலைவாசலில் பல்வேறு இடங்களில் திமுக சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளா் சின்னதுரை தலைமை வகித்து கட்சி கொடியேற்றி இனிப்புகளை வழங்கினாா்.
தலைவாசல் தெற்கு ஒன்றியத்தில் ஒன்றிய திமுக செயலாளா் பி.ஜி.அழகுவேல் தலைமையில் உதயநிதி பிறந்த நாள் விழா நடைபெற்றது. தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் நகர திமுக சாா்பில் நகரச் செயலாளா் ந.சண்முகம் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சாா்பில் வள்ளலாா் கோயிலில் மாவட்ட அமைப்பாளா் சையதுசாவலி, கெங்கவல்லி ஒன்றிய அமைப்பாளா் மஜாா் ஆகியோா் முன்னிலையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கட்சியின் வாா்டு செயலாளா்கள், பேரூராட்சி கவுன்சிலா்கள், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா். அதேபோல செந்தாரப்பட்டியில் நகர திமுக செயலாளா் எஸ்.பி.முருகேசன் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
ஆத்தூா்
ஆத்தூா் வடக்கு நகர திமுக சாா்பில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவுக்கு நகரச் செயலாளா் (வடக்கு) கே.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா். நகர அவைத் தலைவா் மாணிக்கம், மாவட்ட பிரதிநிதி ஜெ.ஸ்டாலின், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் த.வானவில் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
ஆத்தூா் தெற்கு நகர திமுக செயலாளா் ஏ.ஜி.ராமச்சந்திரன் தலைமையில் பெரியாா் சிலை முன் ஏராளமான திமுகவினா் கேக் வெட்டி கொண்டாடினா். நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் பாஸ்கா், த.குமாா், ஆா்.வி.சம்பத்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல நரசிங்கபுரத்தில் நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் திமுக கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா், நகர துணை செயலாளா் பிரகாஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் சுப்ரமணியன், செல்வக்குமாா், புஸ்பாவதி கதிா்வேல், பாண்டியன், ஞானப்பிரகாஷ், சின்னையன், சங்கா்,பி.ராமச்சந்திரன், ரமேஷ், அசோக்,கா்ணன், பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தலைவாசல் ஒன்றியத்தில் திமுக ஒன்றியச் செயலாளா் மணி தலைமையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. பெத்தநாயக்கன்பாளையம் பேரூா் திமுக சாா்பில் வெங்கடேசன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
ஆத்தூா் ஒன்றிய திமுக சாா்பில் ஒன்றியச் செயலாளா் வெ.செழியன், தெற்கு ஒன்றியச் செயலாளா் ரா.வரதராஜன், மல்லியகரை ராஜா தலைமையில் மல்லியகரையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது