எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கடலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் மலிவு விலை அரிசி விற்பனை

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்தது, காவிரியில் வரவேண்டிய தண்ணீர் கிடைக்காதது, மின் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் நெற் பயிர் சாகுபடி பரப்பு பெருமளவில்

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:12 am

VASUDEVAN.K

வெளி மாநிலத்தில் இருந்து அரிசி கொள்முதல் செய்து, மலிவு விலையில் அரசே நேரிடையாக விற்பனை செய்யும் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் அரிசி விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்தது, காவிரியில் வரவேண்டிய தண்ணீர் கிடைக்காதது, மின் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் நெற் பயிர் சாகுபடி பரப்பு பெருமளவில் குறைந்தது.கடலூர் மாவட்டத்தில் 26,000 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு குறுவை சாகுபடி 10,000 ஏக்கர் குறைந்துள்ளது. அதேபோல் சம்பா 2 லட்சம் ஏக்கரில் நடவு செய்ய வேண்டிய இடத்தில் மிக குறைந்த அளவே விவசாயிகள் நெல் நடவு செய்தனர்.இதனால் மார்க்கெட்டில் நெல் விலை கிடுகிடுவென உயர்ந்து, எப்போதும் இல்லாத அளவுக்கு இரண்டு மடங்கானது. 600 ரூபாய்க்கு விற்பனை செய்த நெல் மூட்டை 1,200 ஆக உயர்ந்தது. இதனால் மார்க்கெட்டில் அரிசி விலை கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உயர்ந்து வரும் அரிசி விலையை கட்டுக்குள் கொண்டுவர முதல்வர் ஜெயலலிதா கிலோ 20 ரூபாய்க்கு அரசே நேரடியாக விற்பனை செய்யும் திட்டத்தை (ஓபன் மார்கெட்டில் விற்பனை) அறிவித்தார்.அதன்படி வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் சன்ன ரகம் மற்றும் பச்சரிசியை நடுத்தர மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் சிரமமில்லாமல் வாங்கும் வகையில் 5 கிலோ பாக்கெட்டாக போட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் உள்ள அமுதம் அங்காடிகளில் இந்த மலிவு விலை அரிசி விற்பனை செய்யப்படுகிறது. கடலூர், நெய்வேலி அமுதம் அங்காடிகளிலும், சூப்பர் மார்க்கெட்டில் உள்ள விற்பனை அங்காடியிலும் முதற்கட்டமாக அரிசி விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது. இரண்டாவது கட்டமாக, மாவட்டத்திலுள்ள வருவாய் வட்ட தலைமை இடங்களில் விற்பனை நிலையங்கள் துவக்கப்படும். மலிவு விலை அரிசியை பொதுமக்கள் கட்டுப்பாடின்றி எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். இதனால் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் அரிசியின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.