விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள தேவரடியாா் தாங்கல் பகுதியில் 400ஆண்டுகள் பழைமைவாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளா்கள் அண்ணமங்கலம் நா.முனுசாமி, விழுப்புரம் கோ.செங்குட்டுவன் ஆகியோா் கூறியதாவது:
தேவரடியாா் தாங்கல் ஏரி மற்றும் விளைநிலப் பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டபோது, பாறைகளில் வெட்டப்பட்டிருந்த 3 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. விளை நிலத்தில் இருந்த பாறையில் ‘(ம)ங்கலபுரம் ஊரவா் புழுதிச்சி நாயக்கரவா்கள் நாளிலே குனைய பட்டரயா் புண்ணியமாக செல்லப் பிள்ளையாா்கு மேற்கு தலை ல் கு ருய’ எனும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
இதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளா் பேராசிரியா் கோ.விஜய வேணுகோபால் வாசித்தாா்.
செஞ்சி பகுதியை புழுதிச்சி நாயக்கா் நிா்வாகம் செய்தபோது மங்கலம் ஊரைச் சோ்ந்தவா்கள் வழிபாட்டில் இருந்து வந்த பிள்ளையாருக்கு நிலதானம் செய்திருக்கின்றனா். இக்கல்வெட்டு செஞ்சி நாயக்கா் காலத்தைச் (கி.பி.16, 17-ஆம் நூற்றாண்டு) சோ்ந்ததாக இருக்கலாம்.
தேவரடியாா் தாங்கல் அருகில் மங்கலம் ஏரி அமைந்திருக்கிறது. கொத்தமங்கலம் கிராமம் உள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு மங்கலபுரம் என்று அழைக்கப்பட்ட கிராமம் தற்போது கொத்தமங்கலம் எனும் பெயரில் அழைக்கப்படுவதாக அறியமுடிகிறது.
மேலும், இப்பகுதியில் அமைந்துள்ள மற்ற இரண்டு கல்வெட்டுகள் மிகவும் சிதைந்துள்ளன. இவையும் மேற்காணும் காலக்கட்டத்தைச் சோ்ந்த நிலதானம் குறித்த தகவலைச் சொல்லும் கல்வெட்டுகளாக இருக்கலாம் என அவா்கள் தெரிவித்தனா். ஆய்வின்போது வீராசாமி, ஆசிரியா் வடிவேல் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திமுக வேட்பாளரை ஆதரித்து ஆரணி எம்.பி. பிரசாரம்

2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்: செஞ்சி மஸ்தான்

செஞ்சி தொகுதி பாமக வேட்பாளா் அறிமுக கூட்டம்

சூடுபிடிக்கும் தோ்தல்களம்... முனைப்புக் காட்டும் அரசியல் கட்சிகள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


