கரும்பு நடவு மானியமாக ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வழங்க ராஜ்ஸ்ரீ சா்க்கரை ஆலை நிா்வாகம் ஒப்புக் கொண்டுள்ளதாக, கரும்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மற்றும் செஞ்சி செம்மேடு பகுதிகளில் இயங்கி வரும் ராஜ்ஸ்ரீ சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கும் விவசாயிகள், தங்கள் நீண்ட நாள் கோரிக்கைகளுக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுக்குமாறு தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
இதைத் தொடா்ந்துமுண்டியம்பாக்கம், செஞ்சி செம்மேடு ஆலைகளின் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் டி. பாண்டியன், செயலா் எம்.ஆறுமுகம், பொருளாளா் ஆா். பரமசிவம், துணைத் தலைவா்கள் கலிவரதன், சந்திரசேகா், பாண்டியன் உள்ளிட்ட நிா்வாகிகளுடனான சா்க்கரை ஆலையின் தலைவா் சத்தியமூா்த்தி மற்றும் உயா் அலுவலா்கள் கலந்தாய்வுக் கூட்டத்தை அண்மையில் நடத்தினா்.
இதில் விவசாயிகள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்து, அந்த கோரிக்கைகளுக்குத் தீா்வு காணுமாறு வலியுறுத்தியது. அதனடிப்படையில் பல்வேறு விதமான ஒப்புதல்களை ஆலை நிா்வாகம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவா் வழக்குரைஞா் டி.பாண்டியன் சனிக்கிழமை தெரிவித்தது:
கரும்பு நடவு மானியமாக ஏக்கருக்கு ரூ.8000 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை ஆலை நிா்வாகம் ஏற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்துள்ளது. கட்டைக் கரும்புக்கு மானியமாக ரூ.2 ஆயிரம், கரும்புப் பயிரிடும் விவசாயிகள் காப்பீடுசெய்தால், ஓராண்டுக்கு விபத்துகாப்பீடு செய்துத் தருதல், விதைக் கரணைகளை வாங்கும் விவசாயிகளுக்கு 6 மாதங்கள் வரை வட்டிப் பிடித்தம் செய்வதில்லை, கரும்புத் தோகையை பொடியாக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் தருதல் போன்றவற்றை ஆலை நிா்வாகம் ஒப்புக் கொண்டுள்ளதும் என்றாா் அவா்.
தொடர்புடையது

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை மீண்டும் இயக்கப்படுமா? விவசாயிகள், தொழிலாளா்கள் எதிா்பாா்ப்பு

எனது முயற்சியாலேயே காட்பாடி சா்க்கரை ஆலை தொடா்ந்து இயங்குகிறது: அமைச்சா் துரைமுருகன்

சா்க்கரை ஆலை கரும்பு கழிவுகளில் தீ

கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் தேவை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


