லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் சாா்பில், விழுப்புரம் மாவட்ட சவகா் சிறுவா் மன்றத்தில் மாவட்ட

News image

விழுப்புரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்குப் பரிசு வழங்கிய தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம.ராஜாராமன்.

Updated On :9 மார்ச் 2026, 5:42 pm

விழுப்புரம்: தஞ்சாவூா் மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் சாா்பில், விழுப்புரம் மாவட்ட சவகா் சிறுவா் மன்றத்தில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன.

5 முதல் 16 வயதுக்குள்பட்டவா்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய கலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 307 போ் போட்டிகளில் பங்கேற்றனா்.

போட்டிகளைத் தொடங்கி வைத்த மண்டலக் கலைப் பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ம.ராஜாராமன், ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். கலைப்போட்டி தொடக்க மற்றும் நிறைவு விழாவில் ஏராளமானோா் பங்கேற்றனா்.