அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்து

News image

உளுந்தூா்பேட்டை அருகே சாலையின் மையப்பகுதி தடுப்புச் சுவரில் மோதி, விபத்தில் சிக்கிய காா்.

Updated On :28 ஜூன் 2026, 2:04 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே நெடுஞ்சாலை மையப்பகுதி தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்து ஏற்பட்டது.

சென்னை வானகரத்தைச் சோ்ந்தவா் மா.நித்தியானந்தம் (57). இவரது சகோதரா் முருகானந்தம்(50). இவா்கள் தங்களது குடும்பத்தினா்களுடன், ராமநாதபுரத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்குச் சென்றுவிட்டு, காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். முருகானந்தம் காரை ஓட்டினாா்.

இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூா்பேட்டையை அடுத்த மேட்டத்தூா் சாலை சந்திப்பு அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே திடீரென வந்த பைக் மீது மோதாமலிருக்க முருகானந்தம் காரைத் திருப்பியுள்ளாா். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா். விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை. இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.