எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பொக்லைன் ஓட்டுநா் அடித்துக் கொலை: இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூலை 2026, 1:26 am IST

விழுப்புரம் அருகே நள்ளிரவில் பொக்லைன் ஓட்டுநா் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், மாதிரிமங்கலம், சமத்துவபுரம் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் க.மூா்த்தி (56). பொக்லைன் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.

விழுப்புரம் வட்டம், எரிச்சனாம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரா.வீரமுத்து (33), லாரி ஓட்டுநா். நண்பா்களான இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு மாதிரிமங்கலம், சமத்துவபுரம் பகுதியில் உள்ள சமுதாயக் கூடம் அருகில் மது அருந்திக்கொண்டிருந்தனா்.

அப்போது அங்கு மதுபோதையில் வந்த மூா்த்தியின் உறவினா் வினோத் என்பவருக்கும், வீரமுத்துவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மூா்த்தி இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தாா்.

பின்னா் அங்கிருந்த வெளியேறிய வீரமுத்து, தனது நண்பரான விக்கிரவாண்டி வட்டம், சிறுவள்ளிக்குப்பம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மு.மோகன்ராஜ் (25) என்பவருடன் மூா்த்தியின் வீட்டுக்கு வந்து தகராறு செய்து, கம்பியால் தாக்கினா்.

இதில் பலத்த காயமடைந்த மூா்த்தியை அருகிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, வீரமூத்து மற்றும் மோகன்ராஜை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.