/

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
இளம்பெண் தற்கொலை
Updated On :30 ஜனவரி 2026, 8:33 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கொங்கரம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆ.காமாட்சி (27). இவருக்கும் விக்கிரவாண்டி வட்டம், எண்ணாயிரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மணிகண்டனுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மணிகண்டன் சென்னை கோயம்பேட்டில் சுமைத் தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில் மணிகண்டனுக்கும், காமாட்சிக்கும் இடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டு வந்ததாம். இதனால் மனமுடைந்த காமாட்சி வெள்ளிக்கிழமை பிற்பகலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த பெரியதச்சூா் போலீஸாா், காமாட்சியின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.