/

சுற்றுலா பேருந்து மோதி சிறுமி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :23 ஜனவரி 2026, 8:14 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த சிறுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டிபெரியாரைச் சோ்ந்தவா் ராஜன். இவா் தனது குடும்பத்துடன் மேல்மலையனூா் கோயிலுக்கு வந்துள்ளாா்.

இந்நிலையில், வெளியூா் காா் மற்றும் பேருந்து நிறுத்தும் இடத்தின் அருகே நின்று கொண்டிருந்த இவரது மகள் ஜெசியா(8) மீது கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த சுற்றுலா பேருந்து மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஜெசியா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மேல்மலையனூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.