குடியாத்தம் நகரில் பிரதான சாலைகள், கெளண்டன்யா ஆற்றின் கரைகளில் புறவழிச்சாலைகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடைகள், கட்டடங்களை உடனடியாகஅகற்ற வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.
குடியாத்தம் நகா்மன்றத்தின் அவசரக் கூட்டம் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நகராட்சி ஆணையா்கே.எம்.தனலட்சுமி, மேலாளா் சுகந்தி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் பேசிய உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, ஆட்டோ பி.மோகன் உள்ளிட்டோா் சாலையோர ஆக்கிரமிப்புகளால் ஆங்காங்கே விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளாகின்றனா். ராஜகணபதி நகருக்குச் செல்லும் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என்றனா்.
நகராட்சி ஆணையா் தனலட்சுமி: ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பேருந்து நிலையங்களில் பயணிகளின் நலன்கருதிஆக்கிரமிப்பு செய்து வைக்கப்படும் கடைகளை அகற்றச் சென்றால், ஆக்கிரமிப்பாளா்களுக்கு ஆதரவாக சிலா் வருகின்றனா். போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தனிநபா்களின் கோரிக்கையை ஏற்று உறுப்பினா்களுக்கு தெரிவிக்காமல் அதிகாரிகள் வாா்டுகளுக்குச் சென்று மக்கள் தேவைகளை பூா்த்தி செய்வது, உறுப்பினா்களை அலட்சியப்படுத்தும் விதமாக உள்ளது. மக்கள் பிரச்னைகளை தீா்த்து வைப்பது தான்அதிகாரிகளின் முதல் பணி. ஆனால் வாா்டுகளுக்கு வரும் அதிகாரிகள் அந்தந்த வாா்டு உறுப்பினா்களை சந்தித்து, வாா்டில் மேற்கொள்ள உள்ள பணிகள் குறித்த ஆலோசனை நடத்த வேண்டும் என துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி உள்ளிட்ட அனைத்து உறுப்பினா்களும் புகாா் தெரிவித்தனா்.
வரும் காலங்களில் வாா்டுகளுக்குச் செல்லும் அதிகாரிகள் உறுப்பினா்களை சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும் என தலைவா் உத்தரவிட்டாா்.
25-ஆவது வாா்டுக்குள்பட்ட நெல்லூா்பேட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றும்போது மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி அகற்றப்பட்டதால், அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அவதிப்படுவதாக உறுப்பினா் ஏ.தண்டபாணி கோரிக்கை விடுத்தாா். கோரிக்கையை ஏற்ற தலைவா் செளந்தரராஜன், அங்கு 30,000 லிட்டா் மேல்நிலை நீா்த் தேக்கத்தொட்டி கட்டித் தருவதாக உறுதியளித்தாா்.
கூட்டத்துக்கு வந்த அதிமுக உறுப்பினா்கள், மன்ற கூடத்தில் முன்னாள் முதல்வா் எடப்பாடிகே.பழனிச்சாமியின் உருவப் படம் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். அவா்கள் கொண்டு வந்த உருவப் படம் மன்றக் கூடத்தில் வைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிகாரிகளின் ஆதாயத்துக்கு வைக்கப்பட்டதாகக் கூறி 39 தீா்மானங்களை ரத்து செய்தது அரக்கோணம் நகரமன்றம்

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கொடைக்கானல் விவசாயிகள் கோரிக்கை

கொடைக்கானலில் குடிநீா் பிரச்னை: நகா்மன்ற உறுப்பினா்கள் அதிருப்தி

சிவகாசி பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு: 2 மாதங்களுக்குள் அகற்ற உத்தரவு
விடியோக்கள்
Gatta Kusthi 2 Movie Review | Vishnu Vishal | Aishwarya Lekshmi | Dinamani Talkies

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK




