சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

போக்குவரத்து நெரிசலில் ஒசூர் சாலைகள்

ஒசூர், நவ. 1: ஒசூரில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதால் இரு, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர். கிருஷ்ணகிரி-ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒசூர் நகர

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:05 pm

டி.ஞானபிரகாசம்

ஒசூர், நவ. 1: ஒசூரில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதால் இரு, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரி-ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒசூர் நகராட்சி முதல் புதிய பஸ் நிலையம் வரையிலும், பெங்களூர்-கிருஷ்ணகிரி சாலையில் ஐசிஐசிஐ வங்கி முதல் பாகலூர் சாலை சந்திப்பு வரையிலும் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கித் தவிக்கவேண்டிய நிலை உள்ளது.

இதேபோல, பாகலூர் சாலை முதல் தாலுகா அலுவலக சாலை வரையிலும், ஏரித் தெரு, பழைய பெங்களூர் சாலை, நேதாஜி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பெங்களூர் முழுவதும் பட்டாசு விற்க கர்நாடக நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து, சிவகாசி பட்டாசு விற்பனையாளர்கள் சில ஆண்டுகளாக ஒசூரில் மொத்த விற்பனை அங்காடி அமைத்து பட்டாசு விற்பனை செய்கின்றனர்.

ஒசூர்-பெங்களூர் சாலை, பாகலூர் சாலை உள்பட முக்கிய சாலைகளில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து அதிகமாக இருக்கும் பாகலூர் சாலையில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பட்டாசு கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

பட்டாசு வாங்க பெங்களூரில் இருந்து வரும் வாடிக்கையாளர்கள், தங்களது கார்களை சாலைகளிலேயே நிறுத்திவிட்டுச் செல்வதால் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சில நிமிடங்களில் கடக்க வேண்டியச் சாலைகளை, பல மணி நேரம் காத்திருந்து கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், பெங்களூரில் இருந்து ஒசூர் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் பாகலூர் சாலை சந்திப்புக்கு வந்து, மீண்டும் ஒசூர் பஸ் நிலையம் செல்ல வேண்டியுள்ளது. மேலும், தாலுகா அலுவலக சாலை மற்றும் கிருஷ்ணகிரி சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள் ஒரே நேரத்தில் பாகலூர் சாலை சந்திப்பில் கூடுவதே போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க முக்கிய காரணம்.

பெங்களூரில் இருந்து ஒசூர் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள், பாகலூர் சந்திப்பிற்கு வராமல் ஒசூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஆக்சீஸ் வங்கி எதிரில், மேம்பாலத்தின் கீழ் பஸ் நிலையத்திற்கு செல்ல புதிய வழி ஏற்படுத்தினால் நெரிசல் குறையும்.

தற்பொழுது பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்களுக்காக மேம்பாலத்தின் கீழ், பாதை அமைத்தது போல, உள்ளே செல்லும் நுழைவு வாயிலின் எதிரிலும் மேம்பாலத்தின் கீழ் புதிய பாதை அமைத்தால் போக்குவரத்து நெரிசல் பாதியாக குறைந்து விடும்.

இப்பணியை நெடுஞ்சாலைத் துறையின் அனுமதி பெற்று ஒசூர் நகராட்சி உடனடியாக செய்ய வேண்டியது கட்டாயம். சில வாரங்களுக்கு முன்பு வரை காலை, மாலை நேரங்களில் மட்டுமே போக்குவரத்து நெரிசல் இருந்து வந்தது. தீபாவளி பட்டாசு கடைகள் மற்றும் வாகன பெருக்கம் காரணமாக, தற்பொழுது பகல் முழுவதுமே நேரிசல் ஏற்பட்டுள்ளது.

இதை கட்டுப்படுத்த போதுமான போலீஸôர் பணியில் அமர்த்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.