சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மூடும் நிலையில் பொது சேவை மையங்கள்

ஒசூர், நவ.15:ஒசூரில் உள்ள பொது சேவை மையங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.   இந்த மையங்கள் மூலம் மக்களுக்கு தேவையான பட்டா, சிட்டா, மின் இணைப்புக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் உள்ளிட்ட சேவைகளை மக்களு

News image
Updated On :25 டிசம்பர் 2023, 4:20 pm

டி.ஞானபிரகாசம்

ஒசூர், நவ.15:ஒசூரில் உள்ள பொது சேவை மையங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

  இந்த மையங்கள் மூலம் மக்களுக்கு தேவையான பட்டா, சிட்டா, மின் இணைப்புக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் உள்ளிட்ட சேவைகளை மக்களுக்கு வழங்க தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஓராண்டுக்கு முன் தொடங்கி வைத்தார்.

  ஆனால் அரசு இந்த பொது சேவை மையங்களுக்கு எவ்வித சேவை வசதிகளையும் வழங்காததால், மையத்தைத் தொடங்கிய முகவர்கள் மூடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

  வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் 1,050 பொது சேவை மையங்கள் தொடங்கப்பட்டன.

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 ஊராட்சிகளுக்கு ஒரு பொது சேவை மையம் வீதம் 221 பொது சேவை மையங்கள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு மையத்திலும் 5 முதல் 10 கணினி மற்றும் இணையதள வசதி வைத்திருந்தவர்களுக்கு இந்த சேவை மையம் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.

  பட்டா, சிட்டா, மின் இணைப்புக் கட்டணம், தொலைபேசி கட்டணம், எல்ஐசி பிரிமியம், பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்காக இனி அரசு அலுவலகங்களுக்கு மக்கள் அலையும் சூழலை தவிர்க்கவே இந்த மையங்கள் தொடங்கப்பட்டன.  பொது சேவை மையத்தின் மூலம் ரூ.10 செலுத்தி பிறப்பு, இறப்பு, பட்டா, சிட்டா போன்ற 32 சேவைக்கான சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்படுவதாக திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பூங்கோதை தெரிவித்திருந்தார்.

  ஆனால் ஓராண்டாகியும், பொதுச் சேவை மையத்திற்கு, சான்றிதழ் அளிக்கும் உரிமையை அரசு வழங்காமல் உள்ளதால், மையம் தொடங்கிய முகவர்கள் சேவைகளை செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

  அலுவலக வாடகை, மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், வங்கிக் கடனுக்காக வட்டி உள்ளிட்டவைகளுக்காக மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் வீதம் செலவிட்டு வரும் முகவர்கள் தடுமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர்.

  மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தோஷ்பாபு மாற்றம் செய்யப்பட்டு வே.க. சண்முகம் அப்பொறுப்புக்கு வந்த நிலையில், திட்டம் கிடப்பில் உள்ளதாக பொது சேவை மைய முகவர்கள் குறை கூறுகின்றனர்.

  அரசு அலுவலகங்களில்  வாங்க வேண்டிய சான்றிதழ்களை ரூ.10 செலுத்தி பொது சேவை மையத்தின் மூலம் வாங்கலாம் என்ற பொதுமக்களின் கனவும் இத்திட்டம் செயல்படாததால் நனவாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.