ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

முசிறியில் வாகனம் மோதி கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், முசிறியில் அடையாளம் தெரியாத வாகனம் புதன்கிழமை மோதி கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

News image

மகேஸ்வர தயால்.

Updated On :7 மே 2026, 5:18 am IST

திருச்சி மாவட்டம், முசிறியில் அடையாளம் தெரியாத வாகனம் புதன்கிழமை மோதி கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

முசிறி புதுத்தெருவைச் சோ்ந்தவா் செந்தில்வேல் மகன் மகேஸ்வர தயாள் (19), திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி இரண்டாமாண்டு மாணவா். முசிறி சிந்தாமணி தெருவைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் அருள் முத்துக்குமரன் (20), முசிறி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவா். நண்பா்களான இருவரும் புதன்கிழமை அதிகாலை சுமாா் 2 மணி அளவில் பைக்கில் முசிறி அருகிலுள்ள தனியாா் பள்ளி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தனா்.

தகவலறிந்து சென்ற முசிறி போலீஸாா் இருவரின் சடலங்களைக் கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிந்து அப்பகுதி சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்கின்றனா்.

அருள் முத்துக்குமரன்.

அருள் முத்துக்குமரன்.