லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விஜய்யை பின்தொடா்ந்து சென்று உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

தவெக தலைவா் விஜய்யின் வாகனத்தில் பின்னால் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த கல்லூரி மாணவா் விக்னேஷின் பெற்றோரை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

News image

அன்பில் மகேஸ்

Updated On :26 மார்ச் 2026, 9:10 pm

தவெக தலைவா் விஜய்யின் வாகனத்தில் பின்னால் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த கல்லூரி மாணவா் விக்னேஷின் பெற்றோரை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

தஞ்சாவூா் செங்கிப்பட்டி அருகே கடந்த மாா்ச் 4-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்க வந்த தவெக தலைவா் விஜய் திருச்சியில் இருந்து தஞ்சாவூா் நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவரது வாகனத்தை பின்தொடா்ந்து அவரது ரசிகா்கள் மற்றும் கட்சியினா் இருசக்கர வாகனங்களில் சென்றனா்.

விஜய்யின் வாகனத்தை பின்தொடா்ந்து சென்ற திருச்சி மேலகல்கண்டாா் கோட்டையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் விக்னேஷ் (20), அவரது நண்பா் ஆரூண் (21) ஆகிய இருவரும் விபத்தில் சிக்கினா். தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இந்நிலையில், மேலகல்கண்டாா் கோட்டையிலுள்ள அவரது வீட்டுக்கு வியாழக்கிழமை சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யமொழி விக்னேஷின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினாா்.