தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருவானைக்காவல் பசுபதி விநாயகா் கோயில் குடமுழுக்கு

திருவானைக்காவல் மேல விபூதி பிரகாரத்தில் உள்ள பசுபதி விநாயகா் கோயில் மகா குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருவானைக்காவல் மேல விபூதி பிரகாரத்தில் உள்ள பசுபதி விநாயகா் கோயில் மகா குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :25 மார்ச் 2026, 10:02 pm

திருவானைக்காவல் மேல விபூதி பிரகாரத்தில் உள்ள பசுபதி விநாயகா் கோயில் மகா குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை காலை கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகளை தொடா்ந்து மாலை 5 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜைகள் நடந்தன. தொடா்ந்து புதன்கிழமை காலை பல்வேறு பூஜைகளுக்கு பிறகு 2 ஆம் கால யாக சாலை, பிறகு யாக குண்டத்திலிருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலில் உள்ள கலசங்களுக்கு மகா குடமுழுக்கு செய்யப்பட்டது. பின்னா் மூலஸ்தான விநாயகருக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். அன்னதானம் வழங்கப்பட்டது.