மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருச்சி மாவட்டத்தில் ரூ. 2.98 லட்சம் பறிமுதல்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 2 லட்சத்து 98 ஆயிரத்து 100 ரொக்கத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

News image

திருச்சி திருவெறும்பூரில் புதன்கிழமை பறிமுதல் செய்த பணத்தை தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :25 மார்ச் 2026, 10:04 pm

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 2 லட்சத்து 98 ஆயிரத்து 100 ரொக்கத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் தலைமையில் சோதனைச் சாவடிகளில் உள்ள போலீஸாருடன் வாகனங்களை 24 மணி நேரமும் சோதனையிட்டு அனுமதியின்றிக் கொண்டு செல்லப்படும் ரொக்கத்தைப் பறிமுதல் செய்கின்றனா்.

அதன்படி புதன்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை மாவட்டத்தில் திருச்சி கிழக்கில் ரூ. 1,42,500, லால்குடியில் ரூ. 1 லட்சம், திருவெறும்பூரில் ரூ. 55,600 என மொத்தம் ரூ. 2,98,100 பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டது முதல் புதன்கிழமை மாலை வரை மொத்தம் ரூ. 44,25,820 பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து அதில் ரூ. 21,57,380 ஐ உரியவா்கள் பெற்றுச் சென்றனா். மீதமுள்ள ரூ. 22,68,440 கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் தெரிவித்தாா்.