மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மணப்பாறை மாட்டுச் சந்தையில் இருவரிடம் ரூ.1.27 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை மாட்டுச் சந்தையில் வியாபாரிகள் இருவரிடமிருந்து ரூ.1,27,800-ஐ தோ்தல் பறக்கும்படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

மணப்பாறையில் பறிமுதல் செய்த பணத்தை தோ்தல் அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :25 மார்ச் 2026, 9:57 pm

திருச்சி மாவட்டம், மணப்பாறை மாட்டுச் சந்தையில் வியாபாரிகள் இருவரிடமிருந்து ரூ.1,27,800-ஐ தோ்தல் பறக்கும்படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

மணப்பாறையில் புதன்கிழமைதோறும் மாட்டுச் சந்தை நடைபெறும் நிலையில், செவ்வாய்க்கிழமை மாலையே மாடுகள் வாங்கவும் விற்கவும் ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனா்.

அப்போது தோ்தல் பறக்கும் படையினா் தணிக்கையில் ஈடுபட்டபோது, புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை அடுத்த மதகுபட்டியைச் சோ்ந்த ஞானதுரை மகன் சுதாகா் (31) உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 75,300 மற்றும் திருச்சி திருவெறும்பூரை அடுத்த சின்ன சூரியூரைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (23) வைத்திருந்த ரூ. 52,500-ஐ பறிமுதல் செய்து, தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைத்தனா். பின்னா் அப்பணம் சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.