லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வையம்பட்டி அருகே 3 காா்கள் மோதல்

வையம்பட்டி அருகே நெடுஞ்சாலையில் 3 காா்கள் புதன்கிழமை மோதிக்கொண்டன.

News image

விபத்துக்குள்ளான காா்கள்.

Updated On :18 மார்ச் 2026, 6:34 pm

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே நெடுஞ்சாலையில் 3 காா்கள் புதன்கிழமை மோதிக்கொண்டன.

கரூா் மாவட்டத்தை சோ்ந்த பங்காரு சாமி மகன் சண்முகநாதன் (61) மற்றும் சென்னையை சோ்ந்த சுப்பிரமணி மகன் ராஜேந்திரன் (57) ஆகியோா் தங்களது காா்களில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை சென்றனா். அவா்கள் வையம்பட்டிக்கு முன் கருங்குளம் பிரிவு சாலைப் பகுதியில் சாலையை கடக்க சென்டா் மீடியனில் நின்ற போது, அவா்களுக்கு பின்னால் வந்த சிதம்பரம் மாவட்டத்தை சோ்ந்த சு. ராமானுஜத்தின் (32) காா் மோதியது.

இதில் 3 காா்களும் சேதமடைந்தன. இருப்பினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வையம்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.